அந்தகன் எனது சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த படம்: சிம்ரன்
அந்தகன் படம் தனது வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்குமென சிம்ரன் கூறியுள்ளார்.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இயக்குநர் பொறுப்பை தியாகராஜனே ஏற்றுக்கொண்டார்.
அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ரவி யாதவ், வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர்.
நடிகர் பிரசாந்த் உடன் கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் படங்களில் சிம்ரன் நடித்துள்ளார்.
2021இல் படப்பிடிப்பு தொடங்கி 2022இல் முடிக்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்தது. தற்போது இந்தப்படம் நாளை (ஆக.9) வெளியாகவிருக்கிறது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் பங்கேற்ற நடிகை சிம்ரன் பேசியதாவது:
தற்போது சினிமா தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளது. தியாகராஜன் சார் என்னை நம்பியதற்கு நன்றி. இந்தப் படம் எனது வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும்.
அந்தகன படத்தை பலமுறை பார்க்கலாம். பார்க்க பார்க்க கூடுதலாக பிடிக்கும். இந்தப் படத்தில் மிகவும் தீவிரமாக நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரத்தை புரிந்துகொள்ள மிகவும் மெனக்கெட்டிருக்கிறேன். தமிழ் மக்களுக்கு ஏற்ப மாற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரீமேக் படமாக இல்லாமல் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.