வாழை, கொட்டுக்காளி முதல் நாள் வசூல் எவ்வளவு?
வாழை, கொட்டுக்காளி திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை மற்றும் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளியும் நேற்று (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகின.
இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. முக்கியமாக, வாழை திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Advertisement
Advertisement
நடிகர் சூரி நாயகனாக நடித்த கொட்டுக்காளியும் கவனம் பெற்றுள்ளது.
இதில், இந்தியளவில் முதல் நாளில் வாழை திரைப்படம் ரூ. 1.15 கோடியையும் கொட்டுக்காளி ரூ. 50 லட்சத்தையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.