முகப்பு
செய்திகள்

ஆச்சரியப்பட வைக்கும் டிமான்ட்டி காலனி - 2 வசூல்!

Updated On : 25 ஆகஸ்ட் 2024, 3:20 pm IST
பகிர்:

நடிகர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி - 2 திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆக.15 ஆம் தேதி வெளியானது.

ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

தங்கலான் படத்துடன் திரைக்கு வந்ததால், பெரிய வெற்றியைப் பெறுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் வாரத்தைவிட இரண்டாம் வாரம் அதிக திரைகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. சென்னையில் தங்கலானைவிட டிமான்ட்டி காலனி - 2 படமே அதிக திரைகளை வைத்திருக்கிறது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 32 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருள்நிதி நடித்த படங்களிலேயே இதுவே அதிக வசூலை ஈட்டிய பிளாக்பஸ்டர் படமென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வெளியாகியுள்ளதால் அங்கும் வசூலைக் குவிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments