FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நானியின் அதிகம் வசூலித்த திரைப்படமான பாரடைஸ்!

தி பாரடைஸ் திரைப்பட வசூல் குறித்து...

பகிர்:

நடிகர் நானி நடிப்பில் வெளியான தி பாரடைஸ் திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (செப்.24) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்கள் கவனம் ஈர்த்திருந்தன. மேலும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உணர்ப்பூர்வமான பின்னணி இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் ஆச்சரியப்படும் வகையில் வணிக ரீதியாக தொடர் முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

Advertisement

Advertisement

முதல் நாளில் ரூ. 88 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 நாள் வசூலாக ரூ. 155 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவே, நடிகர் நானியின் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். மேலும், இந்த வார இறுதிவரை கூட்டம் இருக்கும் என்பதால் ரூ. 200 கோடியை நெருங்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

The box office performance of the film The Paradise, starring actor Nani, has come as a surprise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments