FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல் நாளில் ரூ.88 கோடி வசூலித்த தி பாரடைஸ் திரைப்படம்!

நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...

25 செப்டம்பர் 2026, 4:21 pm IST
பாரடைஸ் திரைப்பட போஸ்டர் - படம்: எக்ஸ் / எஸ்எல்வி சினிமாஸ்
பகிர்:

நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தி பாரடைஸ்’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.88 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் நேற்று (செப்.24) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்தியாவில் பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் விளிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்த கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.88 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

இந்திய அளவில் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சோனல் குல்கர்னி, ராகவ் ஜுயல், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னதாக நானியும் ஸ்ரீகாந்த் ஒடேலாவும் 2023ல் வெளியான தசரா என்ற படத்தில் இணைந்திருந்தது கவனிக்கத்தக்கது.

summary

'The Paradise', led by Nani, earns over Rs 88 crore at box office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments