செய்திகள்

மம்மூட்டி - கௌதம் மேனன் பட டீசர்!

நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள டோமினிக் அண்ட் லேடீஸ் பர்ஸ் டீசர் வெளியானது.

DIN

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தயாரித்து நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு கதை டாக்டர் நீரஜ் ராஜன் எழுத திரைக்கதை, வசனத்தை டாக்டர். நீரஜ் ராஜன், கௌதம் மேனன், டாக்டர். சூரஜ் ராஜன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

கௌதம் மேனன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT