முகப்பு
செய்திகள்

வாடிவாசல் அப்டேட்!

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து...

Updated On : 7 டிசம்பர், 2024 at 10:04 AM
பகிர்:

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை - 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

அதனால், கங்குவாக்குப் பின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூர்யா நடித்து முடித்து தற்போது ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துடன் இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை - 2க்குப் பின் அப்படத்தின் பணிகளைத் துவங்குவதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சூர்யா - 45 படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →