முகப்பு
செய்திகள்

வேற மாதிரி! சஞ்சய் சுப்ரமணியனை பாராட்டிய இளையராஜா!

பாடகர் சஞ்சய் சுப்ரமணியனை பாராட்டினார் இளையராஜா...

Updated On : 10 டிசம்பர் 2024, 3:29 pm IST
இளையராஜா, சஞ்சய் சுப்ரமணியன்
பகிர்:

இசையமைப்பாளர் இளையராஜா கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியனின் ராகத்தைப் பாராட்டியுள்ளார்.

கர்நாடக சங்கீத இசைப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ‘தமிழும் நானும்’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக, விடுதலை - 2 படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ’தெனந்தெனமும் உன் நினைப்பு’ மற்றும் ‘மனசுல ஒரு மாதிரி’ ஆகிய பாடல்களின் சுருதியை புஷ்பலதிகா ராகத்துடன் சஞ்சய் சுப்ரமணியன் பாடினார்.

Advertisement

Advertisement

இதைக்கேட்ட ரசிகர்கள் பலரும் பாராட்டினர். நிகழ்வு முடிந்தபின் சஞ்சய் சுப்ரமணியன் தன் எக்ஸ் பக்கத்தில், “புஷ்பலதிகா - நெனப்பு, ஒரு மாதிரி!” என அவர் பாடிய விடியோவை வெளியிட்டார்.

இதைப் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, “உங்க புஷ்பலதிகா - நெனப்பு, வேற மாதிரி !! வாழ்த்துக்கள்” எனப் பாராட்டியுள்ளார்.

சஞ்சய் சுப்ரமணியன்

சஞ்சய் சுப்ரமணியன் விடுதலை - 2 படத்தில், ’மனசுல ஒரு மாதிரி’ பாடலைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments