எஸ்கே - 25 படப்பிடிப்பு அப்டேட்!
எஸ்கே - 25 அப்டேட்...
சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: திரு. மாணிக்கம் டிரைலர்!
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்திலும் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் 25-வது படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
எஸ்கே - 25 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனராம்.
இந்த நிலையில், ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிவகார்த்திகேயனுக்கான காட்சிகள் எடுக்கப்படுகிறதாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.