செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் படத்தின் போஸ்டர்.  
செய்திகள்

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வை போஸ்டர்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு மென்டல் மனதில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல்பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடைசியாக 2022இல் நானே வருவேன் படத்தினை இயக்கியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார்.

இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்த ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்தில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

நெல்லை வந்த பேருந்தில் திருட்டு: இரு பெண்கள் கைது

SCROLL FOR NEXT