சிக்கந்தர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்?
நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படம் குறித்து...
நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார். ஆக்சன் திரைப்படமாக பெரிய பொருள்செலவில் உருவாகிறது.
இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, சுனில் ஷெட்டி, காஜல் அகர்வால், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பின்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி படத்தில் இசையமைத்து வரவேற்பைப் பெற்றபின் பெரிய பட்ஜெட் படங்களில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.