ராஜன் வகையறா திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
ராஜன் வகையறா திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்...
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ராஜன் வகையறா திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளாராம்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வட சென்னை பின்னணியில் அதில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே நேரம், ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இதில், வடசென்னையின் அமீர் கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையில் நடிகர் கென் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
வடசென்னை திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆனால், அரசனுக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ராஜன் வகையறாவுக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கவுள்ள தமிழ்க்கடவுள் முருகன் திரைப்படத்திற்கும் சாய் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sai Abhyankar is reportedly set to compose the music for the film Rajan Vagaiyara, directed by Vetrimaaran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.