எஸ்கே - 23 டீசர் எப்போது?
சிவகார்த்திகேயனின் 23-வது படம் குறித்து...
சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.
Advertisement
Advertisement
இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசரை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.