FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகார்த்திகேயன் - 27 திரைப்பட அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்பட அப்டேட்...

24 செப்டம்பர் 2026, 6:18 pm IST
சிவகார்த்திகேயன்
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 27-வது திரைப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது எஸ்கேவுக்குப் பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

ஆனால், சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நாளை (செப். 25) பெரிய அறிவிப்பு வருகிறது என அப்டேட் கொடுத்துள்ளனர்.

பார்க்கிங் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Information has been released regarding an update on actor Sivakarthikeyan's 27th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments