முகப்பு
செய்திகள்

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் உடல்நலக்குறைவால் காலமானார்.

Updated On : 23 டிசம்பர் 2024, 9:50 pm IST
ஷியாம் பெனகல்
பகிர்:

பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் உடல்நலக்குறைவால் காலமானார்.

1970 மற்றும் 1980 ஆண்டுகளில் அங்குர், நிஷாந்த் மற்றும் மந்தன் போன்ற திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற மூத்த திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானர். அவருக்கு வயது 90.

ஷியாம் பெனகல் காலமானதை அவரது மகள் பியா தெரிவித்தார். மக்களுக்கான பிரச்சினைகளை படமாக்குவதில் மிகவும் புகழ்பெற்றவரான ஷியாம் பெனகல் சிறுநீரக நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மும்பை வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

Advertisement

Advertisement

மரணமடைந்த பெனகலுக்கு நீரா பெனகல் என்ற மனைவியும் பியா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது 90வது பிறந்தநாளை கடந்த 10 நாள்களுக்கு முன்பு டிசம்பர் 14 அன்று கொண்டாடினார்.

பெனகல் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார். அவரது படங்களில் பூமிகா, ஜூனூன், மண்டி, சூரஜ் கா சத்வான் கோடா, மம்மோ மற்றும் சர்தாரி பேகம் ஆகியவை ஹிந்தி சினிமாவில் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

தி மேக்கிங் ஆஃப் தி மகாத்மா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: தி ஃபார்காட்டன் ஹீரோ முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் ஆகிய வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.