FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எனது மகன் இறந்துவிட்டான்.. த்ரிஷா பகிர்ந்த சோகச் செய்தி!

எனது மகன் இறந்துவிட்டான் என நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

Updated On : 25 டிசம்பர் 2024, 1:02 pm IST
நடிகை த்ரிஷா
பகிர்:

எனது மகன் இறந்துவிட்டான் என்று நடிகை த்ரிஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்.

நடிகை த்ரிஷா, ஜோரோ என்று பெயரிடப்பட்ட நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அவ்வப்போது அதனுடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம்.

திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்துவந்தாலும், படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும்போது ஜோரோவுடன்தான் இருப்பார். அது தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களில் வரவியிருந்தது.

Advertisement

Advertisement

அதாவது, டிச.25 அதிகாலையில், அவர் வளர்த்து வந்த ஜோரோ, உயிரிழந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என் மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். நானும் எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிது காலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஜோரோவின் புகைப்படம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments