கார்த்தியின் புதிய தோற்றம்..! எந்தப் படத்திற்காக?
நடிகர் கார்த்தியின் புதிய புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.
பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கான கார்த்தியின் தோற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெரிய கெட்டப் மாற்றங்கள் இல்லாத கார்த்தியின் படங்கள் இப்படத்திற்கு நம்பிக்கையைச் சேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.