லால் சலாம்: தேவா குரலில் அன்பாளனே பாடல்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள லால் சலாம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் வருகிற பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.
இதையும் படிக்க: மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம்: மனம் திறந்த நடிகை நஸ்ரியா!
Advertisement
Advertisement
இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
2.32 மணி நேரம் ஓடக்கூடிய லால் சலாம் படத்தில் இடம்பெற்ற தகாத வார்த்தைகள், மத ரீதியான வசனங்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேவா குரலில் அன்பாளனே லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.