ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! கடைசியாக சாப்பிட்டது நூடுல்ஸ்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில், அவர்கள் கடைசியாக அவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர் என்பது பற்றி..
கிரேட்டர் நொய்டா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சந்தேகிக்கப்படும் வகையில் மரணமடைந்துள்ளனர். இவர்கள் கடைசியாக நூடுல்ஸ் சாப்பிட்டிருக்கிறார்கள்.
ரபுபுரா காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், உணவு விஷமாகி உயிரிழப்பு நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
மரணமடைந்தவர்கள் மகேஷ் (37), மனைவி லலிதா (35), அவர்களது லட்டு (11), மிஷ்டி (7), சக்ஷத் (3) என்ற குழந்தைகள் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை இரவு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். சனிக்கிழமை காலை, இவர்களது இறப்பு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடல் கூராய்வு முடிவுகளுக்காக காவல்துறை காத்திருக்கிறார்கள். நெருங்கிய உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.