முகப்பு

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தோல்வி!

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தோல்வி அடைந்துள்ளதைப் பற்றி...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தோல்வி!
ஜாபர் சிங் கர்ரா.
பகிர்:

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 41 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அக். 22, 28, நவம்பர் 3,14 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடந்தது. இதில் 37 மாவட்டங்களில் பதிவான வாக்குகள் இன்று (நவ. 20) எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும், பிறகு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. எஞ்சிய 4 மாவட்டங்களில் டிச. 17 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான ஜாபர் சிங் கர்ராவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

ஜாபர் சிங் கர்ராவின் மனைவி சாந்தி தேவி, அவரது மகன்கள் அஜய் சிங் மற்றும் துர்கா சிங், மற்றும் அவரது தம்பியின் மனைவி பிரதீமா கர்ரா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

சாந்தி தேவியும் அஜய் சிங்கும் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், துர்கா சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

அதேபோன்று ஆல்வாரில் போட்டியிட்ட பரத்பூர் காங்கிரஸ் எம்.பி. சஞ்சனா ஜடாவின் மைத்துனரான ஸ்ரீனிவாஸ் ஜடாவ்வும் தோல்வியடைந்தார். கதுமார் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ் கிஞ்சியின் மருமகள்களான தீபிகா மற்றும் பிந்து இருவரும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

சுரு தொகுதியில் பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர ரத்தோரின் மகன் பராக்ரம் சிங் ரத்தோர் மற்றும் அவரின் மருமகள் கனிகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

summary

Four members of Rajasthan BJP minister Jhabar Singh Kharra's family, including his wife and two sons, lost the rural local body polls, even as relatives of other political heavyweights tasted victory. The Congress, meanwhile, is outperforming the BJP in the elections as counting is underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.