முகப்பு
செய்திகள்

சத்யராஜின் தோழர் சேகுவேரா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சத்யராஜ் நடிக்கும் தோழர் சேகுவேரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 பிப்ரவரி 2024, 7:11 pm IST
பகிர்:

90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம், நகைச்சுவை என ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வசந்த் ரவியுடன் வெப்பன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜாக்சன் துரை 2 படத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தோழர் சேகுவேரா திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments