மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படமொன்றில் நடிக்க உள்ளதை அர்ஜுன் தாஸ் அறிவித்துள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.