ப்ளூ ஸ்டார் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ப்ளூ ஸ்டார் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படம் வரும் பிப். 29 ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.