ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு அதிகாரபூர்வ அப்டேட்டினை வெளிட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை (ஜன.6) காலை 11 மணிக்கு தெரிவிக்கப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.