செய்திகள்

ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டுத் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு அதிகாரபூர்வ அப்டேட்டினை வெளிட்டுள்ளது. 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில், படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. மேலும், திரையரங்கு உரிமத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT