முகப்பு
செய்திகள்

கையில் கட்டு; தொடர்ச்சியான வசனம்: துவங்கியது சூரியின் கருடன் பட டப்பிங்!

சூரி நடித்துள்ள கருடன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. 

Updated On : 26 ஜனவரி 2024, 11:46 am IST
பகிர்:

நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் கருடன். இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். 

துரை செந்தில்குமார் ஏற்கெனவே, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்கியுள்ளார். படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் படக்குழு டப்பிங் பணிகள் துவங்கியதாக விடியோ வெளியிட்டுள்ளது. இதில் சூரி கையில் கட்டுடன் ஒரே டேக்கில் நீளமான வசனங்களை பேசி சூரி அசத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.