முகப்பு
செய்திகள்

சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன்!

Updated On : 4 ஜூலை, 2024 at 3:45 PM
பகிர்:

நடிகர் சசிகுமாரின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாகத் தகவல்.

திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்பும் திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேநேரம், நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களைப் பெற்றார்.

கிராமப்புரங்களுக்கான நாயகன் என்கிற அடையாளத்துடனே இன்றும் நீடிக்கிறார். ஆனால், இடையில் சில படங்களின் தோல்வியால் மார்க்கெட் இழந்தவருக்கு அயோத்தி திரைப்படம் கைகொடுத்தது. தொடர்ந்து, இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கருடன் திரைப்படமும் ரூ.50 கோடி வரை வசூலித்து இவருக்கு மீண்டும் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

Advertisement

தற்போது, சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இப்படம் குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.