தங்கலான் டிரைலர் எப்போது?
தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் டீசரில் நடிகர் விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் டிரைலர் இன்னும் சில நாள்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. டிரைலர் சென்சார் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.