முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவியின் பிரதர் விடியோ!

Updated On : 6 ஜூலை 2024, 11:40 am IST
பகிர்:

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், இறைவன் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரதர் எனப் பெயரிட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

இதன், முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று படத்தின் அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments