3 பாகமாக உருவாகும் வேள்பாரி: ஷங்கர் விளக்கம்!
வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாகிறது. உலகம் முழுவதும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து, நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஷங்கர், “கரோனா காலத்தில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே, அதற்கான திரைக்கதையையும் எழுதினேன். இப்படத்தை 3 பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் நடிகர்கள் குறித்து முடிவு செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுத்தில் தொடராக வெளிவந்த வேள்பாரி நாவல் வாசகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதையும் வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.