முகப்பு
செய்திகள்

சீக்கிரம்.. இந்தியன் - 3 படத்திற்காகக் காத்திருக்க முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்

Updated On : 14 ஜூலை 2024, 12:06 pm IST
பகிர்:

இந்தியன் - 2 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் பக்கத்தில், “இந்தியன் - 2 நமது உலக நாயகன் கமல்ஹாசனின் ஈடுபாடுடன் கூடிய உழைப்புக்கு உதாரணம். பெரிய நோக்கங்களுக்காக இயக்குநர் ஷங்கருக்கும் பின்னணி இசைக்காக அனிருத்துக்கும் பாராட்டுகள். இந்தியன் - 3 படத்திற்காகக் காத்திருக்க முடியாது” எனத் தன் ஆவலைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ இந்தியன் - 2 படத்தை ரசித்தேன். இயக்குநர் ஷங்கர் சாரின் பெரிய எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் எங்களின் முன்னோடி. கமல் சார் எப்போதும்போல் நெருப்புதான். படம் முகத்தில் அறைகிற கடுமையான எதார்த்தங்களை பேசியது பிடித்திருக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments