ஹிப்ஹாப் ஆதியின் 8ஆவது படம்! முதல் பார்வை போஸ்டர்!
நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்’ படத்தில் நடித்திருந்தார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்துக்குப் பிறகு 2 படங்களில் நடித்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தனது 8ஆவது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதன் கிளிம்ஸ் விடியோ நாளை (ஜூலை 19) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தினை இயக்கியுள்ளதாகவும் அதற்கு மக்கள் தங்கள் ஆதரவினை தெரிவிக்குமாறும் ஹிப்ஹாப் ஆதி கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.