தங்கலான் ரிலீஸ் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்ரம் தங்கலானுக்குப் பிறகு சித்த பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்ததால் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.