செய்திகள்

பிரதர் முதல் பாடல்!

DIN

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், இறைவன் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரதர் எனப் பெயரிட்டிருந்தனர்.

இதன், முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடலை வெளியிட்டுள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்பாடலை பால் டப்பா எழுதி, பாடியுள்ளார்.

ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT