முகப்பு
செய்திகள்

ஹாலிவுட் தரத்தில் கிளிம்ஸ் விடியோ..! ரசிகர்கள் பாராட்டு மழையில் ஹிப்ஹாப் ஆதி!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள புதிய படத்தின் விடியோ ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

Updated On : 20 ஜூலை 2024, 12:54 pm IST
ஹாலிவுட் தரத்தில் கடைசி உலகப் போர் கிளிம்ஸ் விடியோ
பகிர்:

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்’ படத்தில் நடித்திருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்துக்குப் பிறகு 2 படங்களில் நடித்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயர் அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் , கிளிம்ஸ் விடியோ வெளியாகி மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

குறிப்பாக விஎஃப்க்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் சமூல வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

”உங்களுக்கு இப்படி எல்லாம் இயக்க வருமா?” “ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.