FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 எப்போது?

மீசைய முறுக்கு - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

16 அக்டோபர் 2026, 10:33 pm IST
மீசையை முறுக்கு 2 திரைப்படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அந்தப் படத்தைத் தொடர்ந்தே, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது, நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இதில், இடம்பெற்ற ஆரா 10/10 ஆகிய பாடல் பெரிய ஹிட் அடித்தது.

Advertisement

Advertisement

மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைத்துறையில் நிலவும் புறக்கணிப்புகளை எதிர்த்து, பாரம்பரிய கானா இசைக்கு உலகளாவிய அங்கீகாரம் தேடி மூன்று தலைமுறை இசைக்கலைஞர்கள் நடத்தும் போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது.

இந்த நிலையில், மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் அக். 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information regarding the OTT release of Hiphop Adhi's 'Meesaya Murukku 2' has emerged.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments