முகப்பு
செய்திகள்

புதிய தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா!

’தி ப்ளிஃப்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா..

Updated On : 24 ஜூலை 2024, 9:24 am IST
பிரியங்கா சோப்ரா!
பகிர்:

நடிகை பிரியங்கா சோப்ரா, புதிய ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து, பாலிவுட், ஹாலிவுட் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் குடியேறினார்.

Advertisement

Advertisement

திருமணத்துக்கு பிறகு ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தற்போது ‘தி ப்ளிஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

19ஆம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போராடும் கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில், கடல் கொள்ளைக்காரியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

இதற்காக, மோஹக் ஹேர்ஸ்டைலுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments