செய்திகள்

மது அருந்தியபடி ஓவியா கூறிய அறிவுரை!

DIN

நடிகை ஓவியா மது அருந்தியபடி அறிவுரை ஒன்றைக் கூறியுள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் பெற்றவராக இருந்தார். களவாணி படத்தின் மூலம் அழகான நாயகியாக அறிமுகமானர் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். கலகலப்பு, மதயானைக்கூட்டம் படங்களில் நல்ல நடிப்பையும் வழங்கியிருந்தார்.

ஆனால், சினிமாவில் கிடைத்த புகழெல்லாம் ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்தது. பல லட்சம் ரசிகர்கள் ஓவியாவை பாராட்டிக்கொண்டிருந்த நாள்கள் அவை.

பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மது அருந்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் தைரியமாக நடிகையாக இருந்தாலும் இந்தளவிற்காக என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT