முகப்பு
செய்திகள்

மகாராஜா ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய அமீர் கான்?

Updated On : 28 ஜூலை 2024, 1:24 pm IST
பகிர்:

மகாராஜா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Advertisement

Advertisement

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சனங்களில் காண முடிகிறது. மேலும், ஹிந்தி ரசிகர்களிடையேயும் இப்படம் ஹிட் அடித்தது.

இந்த நிலையில், மகாராஜா ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமீர் கான் நல்ல திரைப்படங்களின் ரீமேக் உரிமையைப் பெற்று அவரே நடிப்பார். இறுதியாக, ஃபாரஸ்ட் கம்ப் (forest gump) திரைப்படத்தின் ரீமேக்கான லால் சிங் சத்தாவில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments