இரண்டாயிரம் திரைகளில் மகாராஜா!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் 2000 திரைகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் 2000 திரைகளில் வெளியாகியுள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஜா திரைப்படம் இன்று (ஜூன் 14) உலகம் முழுவதும் 1915க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.
பத்ரிகையாளர் திரையிடலில் அபாரமான வரவேற்பு பெற்ற இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.