FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட்..’ தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சசிகுமார்

சினிமாவில் அடையும் தோல்விகளைப் பலரும் ஒப்புக்கொள்வதில்லை என சசிகுமார் கூறியுள்ளார்.

Updated On : 15 ஜூன் 2024, 4:28 pm IST
பகிர்:

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.

கருடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய நடிகர் சசிகுமார், “இப்போதெல்லாம் ஓடாத படத்திற்குத்தான் சக்சஸ் மீட் வைப்பார்கள் என பேசுகிறார்கள். அதற்கு காரணம், பலருக்கும் தோல்வி என்றாலே பயம். நாம் தோல்விகளை ஒப்புக்கொள்ள பழக வேண்டும். அப்போதுதான் அடுத்த படத்தில் வெல்ல முடியும். தோல்வியடைந்தால் ஒரே காரணம்தான். வெற்றி பெற்றால் பல காரணங்கள் இருக்கும்.

அப்படி, கருடன் திரைப்படத்தின் வெற்றிக்கு பலரும் காரணமாக இருந்தார்கள். ஆனால், முதல் காரணம் படத்தின் தயாரிப்பாளர்தான். அவர்தான் கருடன் உருவாகவும் நான் இப்படத்தில் இணையவும் முக்கியமானவராக இருந்தார். புரோட்டா சூரி எனும் அடைமொழியையே சூரி அழித்துவிட்டார். இனி கதைநாயகனாக இருக்கும் வரை என்றும் வென்றுகொண்டே இருப்பார்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments