முகப்பு
செய்திகள்

ஒரே தேதியில் வெளியாகும் தங்கலான், வணங்கான்?

Updated On : 18 ஜூன் 2024, 1:00 pm IST
பகிர்:

தங்கலான் மற்றும் வணங்கான் திரைப்படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதாகத் தகவல்.

கடந்த வாரம் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாரம் ரயில், லாந்தர், பயமறியான் திரைப்படங்களுடன் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி, துப்பாக்கி திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

தொடர்ந்து, ஜூலை மாதம் இந்தியன் - 2, ராயன், கல்கி ஏடி போன்ற பெரிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதனால், தங்கலான் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் ஜூலை வெளியீட்டிலிருந்து பின்வாங்கின.

Advertisement

Advertisement

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த புஷ்பா - 2 திரைப்படமும் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதால் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் படமும், இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments