முகப்பு
செய்திகள்

பிரபுதேவா நடிக்கும் மூன் வாக்!

Updated On : 19 ஜூன் 2024, 12:51 pm IST
பகிர்:

பிரபுதேவா நடித்து வரும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம் உருவாகிவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார். மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான் - இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.