முகப்பு
செய்திகள்

கோட் படப்பிடிப்பை முடித்த த்ரிஷா!

Updated On : 24 ஜூன் 2024, 12:07 pm IST
பகிர்:

நடிகை த்ரிஷா கோட் படத்தில் நடித்து முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்டுள்ளனர். இதில், இடம்பெற்ற 2 பாடல்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement

இப்படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்த்தை ஏஐ மூலம் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், நடிகை த்ரிஷாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோட் படத்தில் தனக்காக படப்பிடிப்பை த்ரிஷா நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments