கள்வன் டிரைலர்!
நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இசை நடிப்பு என இரண்டிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜி.வி. பிரகாஷ்குமார். அவர் கடைசியாக நடித்த அடியே திரைப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக, இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜிவி பிரகாஷ்குமார், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ள கள்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Advertisement
Advertisement
யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் டில்லிபாபு தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.