‘அரண்மனை 4’ டிரைலர் அறிவிப்பு: நிகழ்ச்சியை நேரலையாகப் பார்க்கலாம்!
அரண்மனை 4 ஆம் பாகத்தின் டிரைலர் எப்போது வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.
பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021இல் ’அரண்மனை 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
டிரைலர் நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே நேரலையாகப் பார்க்க அவ்னி சினிமாஸ் யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.