சாகாவரம்: வைரலாகும் டேனியல் பாலாஜியின் விடியோ!
நடிகர் டேனியல் பாலாஜியின் கவனம் ஈர்க்கும் சமூகவலைதள விடியோ..
பிரபல தமிழ் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி தொடரில் முதல்முறையாக டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் டேனியல் பாலாஜி ஆனார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ’ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.
Advertisement
Advertisement
கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அதன் விடியோக்களை ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக சாகாவரம் எனும் வசனம் வரும் விடியோக்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.