FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?

அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைவது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது பற்றி...

17 அக்டோபர் 2026, 4:28 pm IST
தனுஷ் | எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் வரவேற்கப்படும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், தமிழக எழுச்சிக் கழகம் என்ற கட்சி தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் சமீபத்தில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இதனிடையே, இனிவரும் காலங்களில் அவரின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாகச் செயல்படும் என அக். 15-ல் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், நற்பணி இயக்கத்துக்கான கொடியும் லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் வரவேற்கப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, "அதிமுகவுக்கு யர் வந்தாலும் இணைத்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. இயக்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுபவர் யாராக இருந்தாலும் அவர்களை எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்வார். இவர் வரலாம், அவர் வரலாம் என யாரையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது. இயக்கத்துக்கு நல்ல கருத்துகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கிறார். முன்னணி நடிகராக இருக்கும் அவர், அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வந்தபின் நடிக்கக் கூடாது. இன்று சிலர் படத்திலும் நடிக்கிறார்கள், அரசியலிலும் நடிக்கிறார்கள்.

நடிகர் தனுஷ், அதிமுகவில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்" என்று தெரிவித்தார்.

summary

Is actor Dhanush joining the AIADMK?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments