முகப்பு

4-வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல். ராய்! படப்பிடிப்பு எப்போது?

தனுஷ் - ஆனந்த் எல். ராய் திரைப்படம் குறித்து...

33 வினாடிகள் முன்பு
4-வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல். ராய்! படப்பிடிப்பு எப்போது?
தனுஷ் - ஆன ந்த் எல். ராய்
பகிர்:

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மே திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

கடந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது. இதனால், தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் ரூ. 160 கோடி வரை வசூலித்து கடந்தாண்டின் வெற்றிப்படமானது.

Advertisement

Advertisement

இதனால், நடிகர் தனுஷ் - ஆனந்த் எல். ராய் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், 4-வது முறையாக இணையும் இக்கூட்டணியின் படப்படிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படம் பீரியட் கால காதல், ஆக்‌ஷன் கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

New information has emerged regarding the film being made by the collaboration of actor Dhanush and director Aanand L. Rai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.