முகப்பு

சாய் அபயங்கரின் ஒ.ம் இசைகளுக்கு நல்ல வரவேற்பு!

ஒ.ம் திரைப்படத்தின் ஓஎஸ்டி வெளியீடு...

சாய் அபயங்கரின் ஒ.ம் இசைகளுக்கு நல்ல வரவேற்பு!
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓ.ம் திரைப்படத்தின் ஒஎஸ்டி இசை வெளியாகியுள்ளது.

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ஓ.ம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வணிக ரீதியாக அடுத்தடுத்த நாள்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

ஓ.ம் திரைப்படம் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவாக, இந்த வசூலைச் செய்த தனுஷ் திரைப்படமாகவும் இது மாறியுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, இப்படத்தின் பின்னணி இசைக்களுக்கான ஒஎஸ்டி வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள சாய் அபயங்கரின் இசைகளை ரசிகர்கள் பெரிதாகப் பாராட்டி வருகின்றனர்.

முக்கியமாக, சாய் பல்லவிக்கான பின்னணி இசை, அண்ணாமலையாருக்கு அரோகரா, சியா எண்ட்ரி ஆகியவை திரையரங்குகளிலேயே அசத்தலான வரவேற்பைப் பெற்றன. தற்போது, விரைவாக ஓஎஸ்டியும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

The original soundtrack (OST) for the film O.M., starring actor Dhanush, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.